James Anderson (Photo Credit: @_FaridKhan X)

நவம்பர் 06, லண்டன் (Sports News): இந்தியாவில் 2025-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 18வது ஐபிஎல் (IPL 2025) கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பிசிசிஐ (BCCI) நேற்று (நவம்பர் 05) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு முன்னதாக, இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. Men's Senior National Hockey Championship 2024: தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2024; தமிழ்நாடு - மத்திய பிரதேசம் ஆட்டம் டிரா..!

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 6, டெல்லி 4, ஆர்சிபி 3, பஞ்சாப் 2 என வீரர்களை தக்க வைத்துள்ளது. தற்போது, ஐபிஎல் ஏலத்திற்கு 1,165 இந்தியர்கள், 409 வெளிநாட்டவர்கள் என்று மொத்தம் 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 48 இந்தியர்கள் உட்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடியவர்கள் ஆவர்.

இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரரும், அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson) முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான இவர், ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலை ரூ.1.25 கோடிக்கு பதிவு செய்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளூர் டி20 போட்டியில் கடைசியாக 2014-ஆம் ஆண்டு விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.