HBD Virat Kohli (Photo Credit: @HemanthHvt_ X)

நவம்பர் 05, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆன விராட் கோலி (Virat Kohli) இன்று தனது 36வது பிறந்தநாளை (Birthday) கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலி அசுர வளர்ச்சி அடைந்தார். சச்சினின் சில சாதனைகளை விராட் கோலி முறியடித்தார். அதிலும், குறிப்பாக ஒரு நாள் தொடரில் 50 சதங்கள் அடித்து இருந்த சச்சினின் சாதனையை விராட் கோலி குறைந்த இன்னிங்ஸ்களிலேயே முறியடித்து சாதனை படைத்தார். Grand Masters Chess Championship 2024: இன்று முதல் தொடங்குகிறது சென்னை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்; நேரில் சென்று பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!

கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இவர், இந்திய அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,040 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதிகபட்சமாக 254 ரன்கள் அடித்து இருக்கிறார். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 47.83 ஆகவும் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், 295 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் விராட் கோலி, 13,906 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அதிகபட்சமாக 183 ரன்கள் அடித்திருக்கிறார். ஒரு நாள் போட்டி சராசரி 58.18 ஆக உள்ளது. ஒருநாள் போட்டிகளில் 50 சதம், 72 அரை சதங்கள் அடித்து இருக்கிறார்.

சர்வதேச டி20-யில் 125 போட்டிகளில் விளையாடி இருக்கும் கோலி, அதில் 4,188 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது சர்வதேச டி20 சராசரி 48.69 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.04 ஆகும். சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 38 அரை சதங்கள் அடித்துள்ளார். அவர் 2024 டி20 உலகக் கோப்பை வென்றதோடு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விராட் கோலியின் 36வது பிறந்தநாளுக்கு சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.