அக்டோபர் 30, பிரான்ஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கால்பந்து இதழ் (France Football Magazine) சார்பாக, ஆண்டுக்கு ஒரு முறை சர்வதேச அளவில் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு பாலன் டி'ஓர் விருது (Ballon d'Or Award) வழங்கப்படும்.
கடந்த 67 ஆண்டுகளாக இந்த நிகழ்வு தொடர்ந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி, எட்டாவது முறையாக அர்ஜென்டினா நாட்டை சார்ந்த மெஸ்ஸி (Lionel Messi) இந்த விருதை பெற்றுள்ளார்.
பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெஸ்ஸி எட்டாவது முறையாக இந்த விருதை பெறுவது, அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. Courtallam Main Falls Flood: குற்றாலம் மெயின் அருவியில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு; ஆட்பறித்து கொட்டிய வெள்ளம்.!
அதேபோல, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை இவ்விருதை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆடவருக்கும்-பெண்களுக்கும் பாலன் டி'ஓர் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்ட் மாதம் 01ம் தேதி முதல் 31 ஜூலை வரை சர்வதேச அளவில் கால்பந்து விளையாடும் வீரர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவை இறுதி செய்யப்பட்டு அக். 30 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடைமுறை 67 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது.