Way to Courtallam Falls (Photo Credit: Facebook / X)

அக்டோபர் 31, குற்றாலம் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் மெயின் அருவி (Courtallam Main Falls), ஐந்தருவி (Five Falls), பழைய குற்றாலம் (Old Courtallam) உட்பட பல்வேறு அருவிகள் இருக்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழைக்கான நேரம் என்பதால், தமிழ்நாட்டிலும் - கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் மழைபொழிவானது தொடர்ந்து இருந்து வருகிறது.

இதனால் தென்காசியில் உள்ள பல்வேறு அருவிகளில் நீர் வரத்து என்பது இருந்து வருகிறது. நேற்று குற்றாலத்தில் இயல்பான நீர் அருவிகளில் வெளியேறியது.

குற்றாலத்திற்கு சென்றிருந்த பல சுற்றுலாப்பயணிகளை அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் திடீரென குற்றாலத்தில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ED Gives Notice to Arvind Kejriwal: டெல்லி அரசியலில் உச்சகட்ட பதற்றம்; அடுத்த டார்கெட் அரவிந்த் கெஜ்ரிவால்?.. ஊழல் வழக்கில் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை.! 

இதனையடுத்து, தற்காலிகமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் திடீர் வெள்ளம் வந்ததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

குற்றாலத்தை பொறுத்தமட்டில் மலைகளில் பெய்யும் மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. அதனால் அங்கு எப்போதும் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், மீட்பு படையினர் பாதுகாப்பு இருக்கும்.