AFG Vs HKG, Toss (Photo Credit: @iamAhmadhaseeb X)

செப்டம்பர் 09, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், இன்று (செப்டம்பர் 09) முதல் தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். சோனி லிவ் ஓடிடி தளத்திலும், நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. AFG Vs HKG: ஆசிய கோப்பை 2025; முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் நாளை மோதல்..!

ஆப்கானிஸ்தான் எதிர் ஹாங்காங் (Afghanistan Vs Hong Kong):

இந்நிலையில், முதல் லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் (AFG Vs HKG) அணிகள் இன்று (செப்டம்பர் 09) மோதுகின்றன. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு, அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, யாசிம் முர்தாசா தலைமையிலான ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும், ஹாங்காங் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், இப்ராஹிம் சத்ரான், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நூர் அஹ்மத், அல்லா கசன்ஃபர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

ஹாங்காங் அணி வீரர்கள்:

ஜீஷன் அலி, பாபர் ஹயாத், அன்ஷுமன் ராத், கல்ஹான் சல்லு, நிஜாகத் கான், அய்சாஸ் கான், கிஞ்சித் ஷா, யாசிம் முர்தாசா (கேப்டன்), ஆயுஷ் சுக்லா, அதீக் இக்பால், எஹ்சான் கான்.