UAE Vs OMA, Toss (Photo Credit: @CricketTimesHQ X)

செப்டம்பர் 15, அபுதாபி (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய 4 அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 4 அணிகளும் இடம்பிடித்துள்ளன. இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். IND Vs PAK: இராணுவ வீரர்களுக்கு வெற்றியை சமர்ப்பித்த சூரியகுமார் யாதவ்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

ஐக்கிய அரபு அமீரகம் எதிர் ஓமன் (United Arab Emirates Vs Oman):

இந்நிலையில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு அமீரகம் - ஓமன் (UAE Vs OMA) அணிகள் மோதும் 7வது லீக் போட்டி, இன்று (செப்டம்பர் 15) அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், முஹம்மது வசீம் தலைமையிலான யுஏஇ அணி, ஜதீந்தர் சிங் தலைமையிலான ஓமன் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஓமன் அணியின் கேப்டன் ஜதீந்தர் சிங் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:

அலிஷன் ஷராபு, முஹம்மது வசீம் (கேப்டன்), முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா(வ), ஆசிப் கான், ஹர்ஷித் கவுஷிக், துருவ் பராஷர், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், முஹம்மது ஜவதுல்லா, ஜுனைத் சித்திக்

ஓமன் அணி வீரர்கள்:

ஜதீந்தர் சிங் (கேப்டன்), அமீர் கலீம், ஹம்மாத் மிர்சா, விநாயக் சுக்லா, வசீம் அலி, ஹஸ்னைன் ஷா, ஷா பைசல், ஆர்யன் பிஷ்ட், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா, ஜிதன் ரமானந்தி.