செப்டம்பர் 15, துபாய் (Sports News): துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரின் ஆறாவது போட்டி, நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் (Dubai International Cricket Stadium) மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India Vs Pakistan) மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.
இந்திய அணி வெற்றி:
அதனைத்தொடர்ந்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.5 வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இந்திய வீரர்கள் அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 31 ரன்னும், திலக் வர்மா 31 பந்துகளில் 31 ரன்னும் அடித்து வெற்றிக்கு வழிவகை செய்தனர். கேப்டனான சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 47 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா Vs பாகிஸ்தான் இடையேயான உறவுகள் மோசமாகின. IND Vs PAK Asia Cup: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக்கோப்பை தொடர்.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? வானிலை நிலவரம் என்ன?
பரஸ்பரம் கை குலுக்குவதை தவிர்த்த வீரர்கள்:
இந்தியா எதிர் பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியும் பலத்தை எதிர்ப்புக்கு மத்தியிலேயே நடைபெற்றது. மேலும், போட்டியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது. டாஸ் மற்றும் வெற்றிக்குப் பின் இருநாட்டு அணியினரும் கைகுலுக்காமல் விலகிச் சென்றனர். இந்த விஷயம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூரியகுமார் யாதவ் அறிவிப்பு:
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்திக்கையில், "இந்த போட்டி ஒரு அற்புதமான நிகழ்வு. இந்தியாவுக்கு நான் கொடுக்கும் எனது பிறந்தநாள் பரிசாக இதை கருதுகிறேன். பஹல்காமில் உயிரிழந்த குடும்பத்துடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம். இது எங்களின் ஒற்றுமைக்கான வெளிப்பாடு. இந்திய அணியின் வெற்றியை எல்லையில் வீரத்துடன் போராடி நம்மை பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்தியர்களுடன் துணை நிற்பதாக அறிவிப்பு:
We stand by the victims of the families of Pahalgam terror attack. We express our solidarity. We want to dedicate today's win to all our Armed Forces who showed a lot of bravery. Hope they continue to inspire us all and we give them more reasons on the ground whenever we get an… pic.twitter.com/stkrqIEBuE
— BCCI (@BCCI) September 14, 2025