IRE Vs ENG 2nd T20I (Photo Credit: @cricketireland X)

செப்டம்பர் 18, டப்லின் (Sports News): இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், டப்லினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும். அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டியில், இங்கிலாந்து அணி 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SL Vs AFG: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்.. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறுமா ஆப்கானிஸ்தான்..?

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (Ireland Vs England):

இந்நிலையில், அயர்லாந்து - இங்கிலாந்து (IRE Vs ENG) அணிகள் மோதும் 2வது டி20ஐ போட்டி நாளை (செப்டம்பர் 19) நடைபெறவுள்ளது. பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, ஜேக்கப் பெத்தேல் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 3 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அயர்லாந்து அணி 1 போட்டியிலும். இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவில்லை.

அயர்லாந்து அணி வீரர்கள்:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், பாரி மெக்கார்த்தி, கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், கிரேக் யங், பெஞ்சமின் காலிட்ஸ், ஜோர்டன் நெய்ல், பெஞ்சமின் வொயிட்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், அடில் ரஷீத், லூக் வுட், ஸ்காட் கர்ரி, சோனி பேக்கர், ஜோர்டன் கோக்ஸ், டாம் ஹார்ட்லி.