செப்டம்பர் 17, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டி, செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும். குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய 4 அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 4 அணிகள் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் பார்க்கலாம். IRE Vs ENG 1st T20I: அயர்லாந்து அணி அபார பேட்டிங்.. இங்கிலாந்து வெற்றி பெற 197 ரன்கள் இலக்கு..!
பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (Pakistan Vs United Arab Emirates):
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 17) 10வது லீக் போட்டியில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் போடுவதில் தாமதம்:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த விவகாரத்தில், பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இப்போட்டி 1 மணிநேரம் தாமதமாக தொடங்கியது. இந்திய நேரப்படி 7.30 மணிக்கு டாஸ் போட வேண்டிய நிலையில், 8.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற யுஏஇ அணியின் கேப்டன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், முகமது ஹாரிஸ், ஃபகார் ஜமான், சல்மான் ஆகா (கேப்டன்), குஷ்தில் ஷா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.
ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:
அலிஷன் ஷராபு, முஹம்மது வசீம் (கேப்டன்), ஆசிப் கான், முஹம்மது ஜோஹைப், ஹர்ஷித் கௌஷிக், ராகுல் சோப்ரா, துருவ் பராஷர், ஹைதர் அலி, முஹம்மது ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், ஜுனைத் சித்திக்.