IRE Vs ENG 1st T20I Batting First (Photo Credit: @MSDianMrigu X)

செப்டம்பர் 17, டப்லின் (Sports News): இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும், டப்லினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும். அயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி இன்று (செப்டம்பர் 17) நடைபெற்று வருகிறது. IRE Vs ENG 1st T20I, Toss: அயர்லாந்துக்கு எதிரான முதலாவது டி20.. இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

அயர்லாந்து எதிர் இங்கிலாந்து (Ireland Vs England):

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, ஜேக்கப் பெத்தேல் தலைமையிலான இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 2 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அயர்லாந்து அணி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜேக்கப் பெத்தேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அயர்லாந்து அபாரம்:

அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் 34, ரோஸ் அடேர் 26 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் அமைத்தனர். இதன்பின்னர், ஹாரி டெக்டர் 61* ரன்கள், லோர்கன் டக்கர் 55 ரன்கள் அடித்தனர். இதன்மூலம், அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 196 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து சார்பில் ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், அடில் ரஷீத் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

அயர்லாந்து அணி வீரர்கள்:

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ரோஸ் அடேர், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், பாரி மெக்கார்த்தி, கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ், கிரேக் யங்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல் (கேப்டன்), ரெஹான் அகமது, டாம் பான்டன், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், அடில் ரஷீத், லூக் வுட்.