Attack Against Tamilnadu Kabaddi Players in Punjab (Photo Credit: @maha05raja X)

ஜனவரி 24, பஞ்சாப் (Sports News): பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 - 2025 கபாடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபாடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். தற்போது போட்டிகள் நடைபெற்று வருகின்றன. Gold Silver Rate: இன்று மீண்டும் உச்சக்கட்டம்.. சவரன் தங்கம் ரூ.60,400 க்கு விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ.! 

பவுல் பிளே குறித்து புகார்:

இன்று காலை சுமார் 10:00 மணிக்கு மேல் அன்னை தெரசா பல்கலை., பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பவுல் பிளே தொடர்பாக வீராங்கனை ஆடுவரிடம் புகார் அளிக்கவே, அவர் தமிழக வீராங்கனையை தாக்கி இருக்கிறார்.

வாக்குவாதம் மோதலாக உண்டாகியது:

இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவாகவே, அங்கு பீகார் - தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியது. இதனால் தற்காலிகமாக போட்டி நிறுத்தப்பட்டு, தமிழ்நாடு அதிகாரிகள் பஞ்சாப் நிர்வாகம் மற்றும் போட்டி நடத்தும் அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

கபாடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட காணொளி:

தாக்குதலுக்கு உள்ளாகிய மாணவிகள் காயத்துடன் இருக்கும் காட்சிகள்:

கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன...