அக்டோபர் 09, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. இதில் பத்தாவது போட்டியில் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) மோதுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 09-ஆம் தேதியான இன்று ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். India Women vs South Africa Women: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நேரலையில் பார்ப்பது எப்படி?.. வானிலை நிலவரம்.. ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.!
இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி மோதல் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team):
இந்நிலையில், இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி (India Women Vs South Africa Women) மோதும் ஆட்டத்தில் வானிலை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனிடையே, டாஸுக்கு முன்னதாகவே மழை தொடர்ந்த காரணத்தால், தற்காலிகமாக டாஸ் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 03:30 மணிக்கு மேல் டாஸ் போடப்பட்ட நிலையில், டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பேட்டிங் தேர்வு:
🚨 Toss 🚨#TeamIndia have been put in to bat first 👍
Updates ▶️ https://t.co/G5LkyPu4gX#WomenInBlue | #CWC25 | #INDvSA pic.twitter.com/yTf8bbyGCG
— BCCI Women (@BCCIWomen) October 9, 2025