அக்டோபர் 29, கான்பெரா (Sports News): இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா (AUS Vs IND T20I) அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி, கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (அக்டோபர் 29) நடைபெறுகிறது. PAK Vs SA, 1st T20I: தென்னாப்பிரிக்கா அபார பேட்டிங்.. பாகிஸ்தான் வெற்றிக்கு இமாலய இலக்கு..!
ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டி20ஐ தொடர் (Australia Vs India T20I Series 2025):
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டி20ஐ தொடரை கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 32 சர்வதேச டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா அணி 11 போட்டிகளிலும், இந்தியா 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்.
இந்திய அணி வீரர்கள்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.