AUS Vs SA 1st ODI South Africa Won (Photo Credit: @ProteasMenCSA X)

ஆகஸ்ட் 19, கெய்ர்ன்ஸ் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா (AUS Vs SA) அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (ஆகஸ்ட் 19) காலை இந்திய நேரப்படி 10 மணிக்கு தொடங்கியது. Asia Cup 2025 India Squad: ஆசிய கோப்பை 2025; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..!

ஆஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்கா (Australia Vs South Africa):

மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி, டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 296 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 82, கேப்டன் டெம்பா பவுமா 65, மேத்யூ பிரீட்ஸ்கே 57 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4, பென் டுவார்ஷுயிஸ் 2, ஆடம் ஜாம்பா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 88 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். தென்னாப்பிரிக்க சார்பில் சுழலில் மிரட்டிய கேஷவ் மகாராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், நந்த்ரே பர்கர் மற்றும் லுங்கி நிகிடி தலா 2, பிரெனலன் சுப்ரயன் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம், தென்னாப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசேன், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, ஆரோன் ஹார்டி, பென் டுவார்ஷுயிஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா, நாதன் எல்லிஸ்.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

ஐடன் மார்க்ரம், ரியான் ரிகெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரெவிஸ், வியான் முல்டர், கேஷவ் மகாராஜ், பிரெனலன் சுப்ரயன், நந்த்ரே பர்கர், லுங்கி நிகிடி,