ஆகஸ்ட் 19, மும்பை (Sports News): 2025ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (ICC Women's World Cup 2025) கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறவுள்ளது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 05ஆம் தேதி, இலங்கையின் கொழும்புவில் நடைபெறும். இந்திய அணி இதுவரை உலகக் கோப்பை வெல்லாத நிலையில், இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AUS Vs SA 1st ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி.. தென்னாப்பிரிக்கா அணி அபார வெற்றி..!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025:
இந்நிலையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி இன்று (ஆகஸ்ட் 19) அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் காயத்திலிருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் அணிக்கு திரும்பியுள்ளார். அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக இளம் வீராங்கனை பிரதிகா ராவல் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர் உலகக் கோப்பை 2025 அணி (Team India Squad for ICC Women's Cricket World Cup 2025):
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கௌட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), சினே ராணா.