அக்டோபர் 02, பாகிஸ்தான் (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம். இவர் 2019 காலகட்டங்களில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வந்தனர். அவரது சிறந்த ஆட்டத்தை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2019ம் ஆண்டு டி20 மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், 2020ல் ஒருநாள் அணிக்கும் நியமிக்கப்பட்டார். பின் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் படுதோல்விகளை சந்தித்தது. அதற்கு பொறுப்பேற்று கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகிய பாபர் அசாம் (Babar Azam) மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து சூப்பர் 8 சுற்றுக்குள் கூட நுழையாமல் தொடரில் இருந்து வெளியேறியது. அண்மையில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் தோற்று சொந் மண்ணில் மோசமான சாதனையை படைத்தது. அதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் எந்த கோப்பையும் வெல்லாமல் 2வது முறையாக அறிவித்துள்ளார். Ind Beat Ban Scorecard: வங்கதேசத்தை பொட்டலம் போட்டு அனுப்பிய இந்தியா.. WTC பைனலுக்கு செல்வது உறுதியா?!
இதுபற்றி அவர் தனது எக்ஸ் தள பதிவில், "கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்துள்ளேன். இதுகுறித்து கடந்த மாதமே, பிசிபி நிர்வாகத்திற்கும், அணி நிர்வாகத்திற்கும் கூறிவிட்டேன். இந்த அணியை வழிநடத்தியது பெருமையளிக்கும் விஷயம். ஆனால் இப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பேட்டிங்கில் கவனம் செலுத்தும் சூழலில் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியை இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ள பாபர் அசாம், 26 போட்டிகளில் வெற்றிபெற்றும், 15 போட்டிகளிலும் தோல்வியையும், 85 டி20 போட்டிகளில் 48 வெற்றி, 29 தோல்வியையும், அதிலும் சொந்த மண்ணில் வழிநடத்திய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளார். தனது தனித்துவமான ஆட்டத்தால் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த பாபர் அசாம், 2021, 2022ல் ஒருநாள் போட்டிகளில் ஐசிசியின் கிரிக்கெட்டர் ஆப் தி இயர், 2022ல் ஐசிசியின் கிரிக்கெட் ஆப் தி இயர், 2021 ஏப்ரல் மாதத்தில் ஐசிசி பிளேயர் ஆப் தி மந்த், 2022 மார்ச் மாதத்தில் ஐசிசி பிளேயர் ஆப் தி மந்த், 2023 ஆகஸ்ட் மாதத்தில் ஐசிசி பிளேயர் ஆப் தி மந்த் என தொடர்ந்து ஐசிசியால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.