AUS vs WI (Photo Credit: @theedgbaston144 X)

பிப்ரவரி 06, கான்பெரா (Canberrai): தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டி தொடர் நடந்தது.

இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று கான்பெராவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் களத்தில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 24.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 86 ரன்களுக்கு சுருண்டது. Snapchat Layoffs: விளம்பர மார்க்கெட் சவால்.. ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்னாப்சாட்..!

இதை அடுத்து களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றியதுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. மேலும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.