அக்டோபர் 01, கான்பூர் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தியா - வங்கதேச (IND Vs BAN 2nd Test) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூரில் (Kanpur) உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் முதல் நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன. 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
விராட் சாதனை: இந்தியா தரப்பில் அதிரடியாக விளையாடிய ரோகித் 23, ஜெய்ஸ்வால் 72,கில் 39 மற்றும் விராட் கோலி 47 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தில் விராட் கோலி (Virat Kohli) அடித்த ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது. மேலும் நேற்று இந்திய அணி 285 ரன்களை குவித்து உடனே டிக்ளர் செய்ததது. IND vs BAN, 2nd Test: சச்சினைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் உலக சாதனை படைத்த விராட் "கிங்க்" கோலி.. 27000 ரன்களை கடந்து சாதனை.!
இந்தியா வெற்றி: அதாவது, 35 ஓவர்கள்தான் இந்தியா பேட்டிங் செய்தது. இதனால் இன்று இந்தியாவுக்கு விரைவாக விக்கெட்டை வீழ்த்தி வங்கதேசத்தை வெறும் 94 ரன்கள் முன்னிலையில் சுருட்டியது. இந்தியாவும் 94 ரன்கள் இலக்கை 17.4 ஓவர்களிலேயே அடித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வைட் வாஷ் செய்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருதையும் ரவிசந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில்தான் உள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றது. அடுத்ததாக நியூசிலாந்து (3 டெஸ்ட்) மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு (5 டெஸ்ட்) எதிரான மொத்தம் உள்ள 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3ல் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றால் போதுமானதாகும்.
WTC பைனலுக்கு வேகமாக அடியெடுத்து வைக்கும் இந்தியா:
Champions once again! 🏆🇮🇳#TeamIndia shines bright, clinching the #IDFCFirstBankTestSeries 2️⃣-0️⃣ with pure dominance! 🫡#INDvBAN #JioCinemaSports pic.twitter.com/agchoW5YZD
— JioCinema (@JioCinema) October 1, 2024