டிசம்பர், 7: கிரிக்கெட் (Cricket) போட்டிகள் என்றாலே நம்மிடையே குதூகலம் தான் இருக்கும். அதிலும், நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு காண்பிக்கப்படும் வரவேற்பு வேறெந்த போட்டிக்கும் பெரியளவில் கிடைக்காதது ஆகும். இன்று இந்திய அணிக்காக தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யார் யார் விளையாண்டு இருக்கிறார்கள். அவர்களில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர்கள் குறித்து காணலாம்.

தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik): வலது கை மட்டைப்பந்து ஆட்டக்காரர்களில் மிகவும் பிரபலமானவர் தினேஷ் கார்த்திக். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.  இவர் சிறந்த விக்கெட் கீப்பராகவும் கருதப்படுகிறார். இந்தியாவுக்காக டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர், உலகக்கோப்பை ஆகிய போட்டியிலும், ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடுகிறார். இவர் 26 டெஸ்ட், 94 ஓ.டி.ஐ., 56 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin): சென்னையில் உள்ள மேற்கு மாம்பலத்தில் பிறந்து இந்திய அணிக்காக இன்று வரை விளையாடி வரும் வீரர்களில் முக்கியமானவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பவுலிங், பேட்டிங் என ஆல்ரவுண்டராக இருக்கும் அஸ்வின், ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இவர் 86 டெஸ்ட் போட்டி, 113 ஓ.டி.ஐ., 51 டி20 போட்டிகளை விளையாண்டுள்ளார். கிருஷ்ணமாச்சாரிக்கு பின்னர் இந்திய அணியில் நீண்ட ஆண்டுகள் பெருமையுடன் இடம்பிடித்துள்ளவர் இவர் ஆவார்.

Krishnamachari Srikkanth & Ravichandran Ashwin

டி.நடராஜன் (T. Natarajan): சேலம் மாவட்டத்தில் பிறந்து ஐ.பி.எல் போட்டிகளின் வாயிலாக, தனது திறமையால் இந்திய அணிக்கு தேர்வானவர் நட்டு என்ற நடராஜன். இவர் பவுலிங்கில் வல்லவர். சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடுகிறார். இவர் 2 ஓ.டி.ஐ., 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வாஷிங்க்டன் சுந்தர் (WashingtonSundar): தனது 4 வயதில் இருந்து கிரிக்கெட் மீது அலாதி பிரியம் கொண்ட வாஷிங்க்டன் சுந்தர் சென்னையில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 4 டெஸ்ட், 4 ஓ.டி.ஐ., 31 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல் தொடரில் சன் ரைஸஸ் ஹைதராபாத் அணிக்காக களம்காண்கிறார். Top10Movies: அடேங்கப்பா.. ரிலீசுக்கு முன்பு வரவேற்பை பெற்ற டாப் 10 படங்கள்.. ரிலீசுக்கு பின் என்ன ஆனது தெரியுமா?.! 

முரளி விஜய் (Murali Vijay): வலது கை பேட்டிங்கில் பயங்கர கெட்டியாக இருக்கும் முரளி விஜய் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் மீது பேராவல் கொண்ட முரளி விஜய், பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு இறுதியாக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இவர் 61 டெஸ்ட், 17 ஓ.டி.ஐ., 135 எப்.சி ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

அபினவ் முகுந்த் (Abhinav Mukund): சென்னையில் பிறந்து வளர்ந்து 19 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான கிரிக்கெட்டில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்த ஆட்டக்காரர் அபினவ் முகுந்த். அதனைத்தொடர்ந்து இந்திய அணிக்கு தேர்வான அபினவ் 7 டெஸ்ட், 35 டி20, 141 எப்.சி ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (Krishnamachari Srikkanth): கிரிக்கெட் ரசிகர்களால் சிக்கா என்று வருணிக்கப்படும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர், இந்திய அணி தேர்வு கமிட்டியின் தலைவர் என பல பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1983ல் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த போட்டியில், இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல இவர் குவித்த 38 ரன்களே பேருதவி செய்தது.

சர்வதேச அளவிலான போட்டியில் சதங்கள், 5 விக்கெட், ஒரே இன்னிங்சில் 5 கேட்ச்கள் போன்று பல சாதனைகளை இவர் படைத்துள்ளார். தனது ஆக்ரோஷமான பேட்டிங் நடவடிக்கையால் எதிர்கால இந்திய அணியின் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருந்த ஸ்ரீகாந்த், எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வாழ்நாட்களில் 43 டெஸ்ட், 146 ஓ.டி.ஐ., 134 எப்.சி ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 10:46 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).