ஏப்ரல் 18, விசாகப்பட்டினம் (Sports News): ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2023ல் சென்னை அணிக்காக அதிக ரன் அடித்தவர்களில் டெவோன் கான்வே (Devon Conway) முன்னணியில் இருந்தார். இவர் சென்னைக்காக பல நாக் அவுட் மேட்ச்களை விளையாடியுள்ளார். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இவர் விளையாடுவதற்கு முன்னரே இவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக சில ஐபிஎல் போட்டிகளில் இவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Mustafizur Rahman's IPL Stay Extended: சிஎஸ்கே அணியை விட்டு கிளம்பிய முஷ்டாஃபிசுர் ரஹ்மான்.. கெஞ்சிய சிஎஸ்கே.. காரணம் என்ன தெரியுமா?

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அனைத்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் டெவோன் கான்வே காயம் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ரிச்சர்ட் க்ளீசன் (Richard Gleeson) விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக ஆறு டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.