Dwayne Bravo (Photo Credit: Instagram)

செப்டம்பர் 27, ட்ரினிடாட் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் - ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் ஆன டுவைன் பிராவோ (Dwayne Bravo) அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக (Retirement) அறிவித்து இருக்கிறார். 2024 கரீபியன் பிரிமியர் லீக் (CPL) தொடரில் அவர் விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக அந்த தொடரில் பாதியிலேயே விலகினார். இதன்பின்னர், தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த தொடரில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக முன்பே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ICC Test Rankings: ஐசிசி பேட்டிங் தரவரிசை; 2 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்.. ரோஹித், கோலி பின்னடைவு..!

சாம்பியன் பிராவோ:

பிராவோ, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோல 2022-ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயல்பட்டார். இதுவரை மொத்தம் 582 டி20 போட்டிகளில் விளையாடிய 631 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார்.

டி20 நாயகன்:

அவர் ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடர் ஆகியவற்றில் கோப்பைகளை வென்று இருக்கிறார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2 முறை உலகக்கோப்பை வென்றுள்ளார். தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவர், இனி பல்வேறு டி20 அணிகளுக்கும் பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கனத்த இதயத்துடன் ஓய்வை அறிவித்த டுவைன் பிராவோ: