செப்டம்பர் 26, துபாய் (Sports News): டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை (Test Batting Rankings) பட்டியலை ஐசிசி (ICC) நேற்று வெளியிட்டுள்ளது. இதில், வங்கதேச அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் (Rishabh Pant), 731 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதே போட்டியில் அரை சதம் அடித்த தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 751 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்; தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி வழங்கி கௌரவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்.!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) 5 இடங்கள் பின்தங்கி 716 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். விராட் கோலியும் (Virat Kohli) 5 இடங்களை இழந்து 709 புள்ளிகளுடன் 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முதல்இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (899), 2-ஆம் இடத்தில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (852), 3-ஆம் இடத்தில் டேரில் மிட்செல் (760), 4-வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (757) ஆகியோர் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா (728), பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (720), ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் (270) ஆகியோர் முறையே 7 முதல் 9-வது இடங்களில் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) 871 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 2-வது இடத்தில் ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah) 854 புள்ளிகளுடன் உள்ளனர். மேலும், ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) 804 புள்ளிகளுடன 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை: