Bus Accident: கல்லூரி இன்பசுற்றுலா இறுதி சுற்றுலாவான சோகம்; புறப்பட்ட வேகத்தில் பயங்கரம்.. மாணவி பலி., 40 பேர் படுகாயம்.!

ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் கல்விச் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

Bus Accident: கல்லூரி இன்பசுற்றுலா இறுதி சுற்றுலாவான சோகம்; புறப்பட்ட வேகத்தில் பயங்கரம்.. மாணவி பலி., 40 பேர் படுகாயம்.!
Bus Accident (Photo Credit: @backiya28 X)

ஜனவரி 29, ஈரோடு (Erode): ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் பேருந்து ஒன்று கல்லூரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்விச்சுற்றுலா சென்றது. ஆனால் பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தூரம் கூட செல்லவில்லை. கல்லூரி அருகிலேயே, திடீரென பேருந்து பள்ளத்தில் தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த, அந்த கல்லூரியில் பயிலும் 3ம் ஆண்டு மாணவி ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். Thulladha Manamum Thullum: ருக்குவின் தவிப்பும், குட்டியின் ஏக்கமும் நினைவிருக்குதா? - துள்ளாத மனமும் துள்ளும் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு.!

இந்த தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தகவல் அறிந்ததும் கதறி துடித்த பெற்றோர்கள் மருத்துவமனைக்கு ஓடோடி வந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறி துடிக்கும் காட்சி மருத்துவமனை வளாகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).