WI Vs AFG Highlights (Photo Credit: @mufaddal_vohra X)

ஜூன் 18, செயிண்ட் லூசியா (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்ற 40-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் (WI Vs AFG) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடி, ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. Illicit Relationship Punishment: தாயின் கள்ளக்காதலன் ஆணுறுப்பு, கால்களை கோடரியால் துண்டித்த மகன்; உல்லாச உறவை நேரில் பார்த்து பதறவைக்கும் செயல்.!

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும், அதிரடி ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 218 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரான் 53 பந்துகளில் 98 ரன்களை அடித்து, 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார். பின்னர், 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 16.2 ஓவர்களில் 114 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது.

ஆப்கானிஸ்தான் அணி தரப்பில், தொடக்க ஆட்டகாரர் இப்ராகிம் சத்ரான் 38 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஒபேட் மெக்காய் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை அதிரடியாக விளையாடிய நிகோலஸ் பூரான் பெற்று சென்றார்.