டிசம்பர் 22, தென்னாபிரிக்கா (South Africa): இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்கி நடைபெற்றது. இதில், முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முன்னிலை வகித்துள்ளதால், மூன்றாவது ஒருநாள் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. Jammu Kashmir Terrorist Attack: ஜம்மு காஷ்மீரில் திடீரென பதுங்கி தாக்கிய பயங்கரவாதிகள்.. 4 வீரர்கள் வீரமரணம்..!

மாஸ் காட்டிய இந்திய அணி: தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்களை அடித்தது. அதன் பின் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 218 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. மேலும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.