மே 04, மும்பை (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) தொடரின் 51 வது ஆட்டம், நேற்று (03 மே 2024) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை - கொல்கத்தா (MI Vs KKR) அணிகள் இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தார். மனிஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன் எடுத்திருந்தார். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். மும்பை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் நுவன், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பரபரப்பை ஏற்படுத்திய அணிகள்: இதனையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியும், கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறிப்போனது. தொடக்கத்தில் களமிறங்கிய இஷான் சிக்ஸ், பவுண்டரி என அடிக்கத்தொடங்கினாலும் 7 பந்துகளில் 13 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் சர்மா (Rohit Sharma), நமன் என அடுத்தடுத்த நம்பிக்கை நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் காலியானது. சுரேஷ்குமார் (Suryakumar Yadhav) யாதவ் 35 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்தார். பின் களமிறங்கிய திலக், ஹர்திக் ஆகியோரும் அவுட்டாகி வெளியேறினர். Savuku Shankar Arrest: காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசு; யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.!
கொல்கத்தா அணி அதிரடி வெற்றி: இதனால் மும்பை அணியின் வெற்றி கேள்விக்குறியாகிவிட டிம் டேவிட் நின்று ஆடினாலும் இறுதியில் அணி தோல்வியை அடைந்தது. ஆட்டத்தின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவரில் 145 ரன்கள் மட்டும் எடுத்து 10 விக்கெட்டையும் இழந்து தோல்வியை அடைந்தது. கொல்கத்தா அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் மிட்செல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வருண், சுனில், ஆண்ட்ரே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் (Venkadesh Iyer) தட்டிச்சென்றார்.
மின்னல் வேகத்தில் பாய்ந்த பந்தும், தெறித்த ஸ்டெம்பும்: இந்த ஆட்டத்தில், மும்பை அணியின் வீரர் ஜெரால்ட் 7 பந்துகளில் 8 ரன்கள் அடித்திருந்தார். அவர் மிச்சேலின் பந்துகளை 18.5 வது ஓவரில் எதிர்கொண்டபோது 141 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்த பந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் பேட்டரின் ஸ்டெம்பை நேரடியாக பதம்பார்த்து. இதனால் பூரித்துப்போன மிட்செல், கனத்த இதயத்துடன் தனது அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ததை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தினார். அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
Mitchell Starc with the final wicket for @KKRiders 💪
Watch the recap on @StarSportsIndia and @JioCinema 💻📱#TATAIPL | #MIvKKR pic.twitter.com/aUz2emSPdV
— IndianPremierLeague (@IPL) May 3, 2024
இன்றைய ஆட்டம்: இன்று பெங்களூர் - குஜராத் அணிகள் (RCB Vs GT) இடையேயான ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை ஜியோ சினிமா செயலியில் (Jio Cinema) நாம் நேரலையில் இலவசமாக காணலாம்.