டிசம்பர் 15, டெல்லி (Delhi): கடந்த 2013-ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு அளித்தது. மேலும், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்தது.
தோனியின் வழக்கு: அதனைத் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். இது தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மீது, 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது அந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. Vijay Hazare Trophy 2023: விஜய் ஹசாரே கோப்பை 2023... அரை இறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி..!
இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகனன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க அவகாசம் கொடுத்தும், அவர்கள் எந்த விளக்கமும் தரவில்லை. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்தனர்.