டிசம்பர் 15, ராஜ்கோட் (Rajkot): இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதனைத் தொடர்ந்து இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டமானது தமிழ்நாடு மற்றும் ஹரியானா அணிகள் இடையே நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தோல்வியடைந்த தமிழ்நாடு அணி: அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹரியான அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 293 ரன்களை எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஹரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. Tirupattur Shocker: வேனின் சக்கரத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி: வீட்டு வாசலில், தாயின் கண்முன் நடந்த சோகம்.!
இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?: இதனைத் தொடர்ந்து விஜய் ஹசாரே கோப்பை தொடரின் 2வது அரையிறுதி ஆட்டமானது ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா அணிகள் இடையே நடந்தது. இதில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது நாளை மதியம் 1.30 மணிக்கு ராஜஸ்தான் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.