ஏப்ரல் 03, புதுடெல்லி (New Delhi): அடிக்கிற வெயிலுக்கு ஏசி கட்டாயமான ஒரு பொருளாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட ஏசியை சரியாக தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம். ஆஃபரில் கிடைக்குது என்பதற்காக தரமற்றவைகளை வாங்குவது நல்லதல்ல.
நீங்கள் ஏசி (Air Conditioner) வாங்க முடிவெடுத்தால் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது உங்கள் ரூம் அளவு தான். 100 - 120 சதுர அடி இருக்கும் என்றால் 1 டன் ஏசி போதுமானது. பெரிய அறைகளுக்கு, 1.5 டன் அல்லது 2 டன் வாங்கலாம். மேலும் ஸ்பிளிட் ஏசியை பொருத்தி விடலாம். ஆனால் விண்டோ ஏசிகளுக்கு, ஏசியின் பரிமாணங்களுடன் பொருந்தக்கூடிய சரியான அளவிலான விண்டோ உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். இன்வெர்ட்டர் ஏசியாக இருப்பது தான் நல்லது. The Greatest of All Time: மிரட்டும் தளபதி படத்தின் புதிய போஸ்டர்.. ஆனா போஸ்டரில் ஒரு சின்ன ட்விஸ்ட்..!
மேலும் குறைந்த (dB) டெசிபல் சத்தம் உருவாக்கும் ஏசி (AC) பொருத்துவது நல்லது. வைஃபை ஆதரவுடன் வரும் ஏசி மாடல்கள் ஆனது ஸ்கெட்யூலிங், ஆட்டோ டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல், வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பல கூடுதல் செயல்பாடுகளுடன் வரும். ஆனால் இவை விலை உயர்ந்தவைகளாக இருக்கும். ஏசி ஒருமுறைதான் வாங்க போகிறீர்கள். எனவே உங்களுக்கு வேண்டியதை சரியாக தேர்ந்தேடுத்து வாங்குங்கள்.