MS Dhoni (Photo Credit: @OverMidWicket X)

மார்ச் 21, புதுடெல்லி (New Delhi): கிரிக்கெட் ரசிகர்களால் பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள், நாளை முதல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ளதால், முதல் 22 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே ஐபிஎல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கும் முதல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூர் (CSK Vs RCB) அணிகள் நாளை மோதுகின்றன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் புதிய கேப்டனாக எம்எஸ் தோனிக்கு (MS Dhoni) பதிலாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இதுவரை 5 ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கேக்கு தோனி பெற்று கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக 226 போட்டிகளில் தோனி விளையாடி இருக்கிறார். இதில் 133 வெற்றி, 91 போட்டிகளில் தோல்வியும் அடங்கும். Ruturaj Gaikwad to Captain CSK in IPL 2024: எதே.. "தல"க்கு தலைமை பொறுப்பு இல்லையா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. அப்போ யார் கேப்டன்?.!

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என ரசிகர்கள் கருதி வந்தனர். இந்நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தனது முகநூல் பக்கத்தில் இந்த சீசனில் தான் ஒரு புதிய ரோலில் செயல்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதைவைத்தே சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகவுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்பியது. இதனை உறுதி செய்யும் வகையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால், இனி டாஸ் போடும் போது மற்றும் ஆட்டம் முடிந்த உடன் கேப்டனாக தோனி பேசுவதையும் இனி ரசிகர்களால் பார்க்க முடியாது. இதனால் ரசிகர்கள் சோகம் அடைந்து உள்ளனர். அதே நேரம் தோனியின் பல வீடியோக்களை பகிர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தல..

என்றும் தோனி..

 தோனி என்ற பெருந்தலைவன்..

 மிஸ் யூ தல...

காலத்தை கடந்து உயர்த்து நிற்கும் காவியத்தலைவன்..