மார்ச் 20, பெங்களூர் (Cricket News): 2014ஆம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐபிஎல் அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் தற்போது பெயரை மாற்றி இருக்கிறது. அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) என்ற பெயர் "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" (Royal Challengers Bengaluru) என மாற்றப்பட்டுள்ளது. World Sparrow Day 2024: "புல்லினங்கால்… ஓஒ… புல்லினங்கால்… உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்…" இன்று உலக சிட்டுக்குருவி தினம்..!
2008 முதல் 2023 வரை 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஒரு கோப்பை கூட வெல்லாத அணியாக உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. தற்போது இந்த பெயரை மாற்றியதால் கப் அடிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும்ஜ இதுவரை சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த ஜெர்ஸியை அணிந்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இனி கீழே சிவப்பும், மேலே நீல நிறமுமாக உள்ள ஜெர்ஸியை அணிய உள்ளனர்.