டிசம்பர் 16, பிரிஸ்பேன் (Sports News): ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி (IND Vs AUS), பார்டர் கவாஸ்கர் கோப்பை 2024 - 25 (Border Gavaskar Trophy) சீசனை விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது. எஞ்சிய மூன்றாவது போட்டி, டிசம்பர் 15 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. Madonna & Pope Francis: அமெரிக்க நடிகையுடன் போப் பிரான்சிஸ்? ஏஐ கிளப்பிய பகீர் சர்ச்சை.. அதிர்ச்சியில் உலக நாடுகள்.!
ஆஸ்திரேலிய அணி இமாலய ரன்கள் குவிப்பு:
முதலில் நீங்கள் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, 117.1 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 445 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஸ்டீவன் ஸ்மித், டார்விஸ் ஹெட் ஆகியோர் 100 ரன்கள் கடந்து அசத்தியிருந்ததால், அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஆஸி., அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஸ்டீவன்ஸ்மித் 190 பந்துகளில் 101 ரன்னும், டார்விஸ் ஹெட் 160 பந்துகளில் 152 ரன்னும், அலெக்ஸ் 88 பந்துகளில் 70 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர்.
இந்திய அணியின் வெற்றியை எதிர்பார்க்கும் ரசிகர்கள்:
இந்தியன் சார்பில் பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, மறுமுனையில் தற்போது இந்திய அணி களம் இறங்கி விளையாட தொடங்கியுள்ள நிலையில், இன்று உணவு இடைவேளை வரை, இந்திய கிரிக்கெட் அணி 7.2 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து, 22 ரன்கள் எடுத்திருந்தது/ இதனால் இந்தியனின் வெற்றிக்கு 423 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு கவாஸ்கர் கோப்பை கிடைக்கும் என்பதால், இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அணியை ரோஹித் சர்மா வழிநடத்துகிறார்.
நேற்றைய போட்டியை காண ஆவலுடன் ரசிகர்கள் வந்திருந்தாலும், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதனால் இன்று பலரும் பிரிஸ்பேனில் உள்ள தி காபா (The Gabba Stadium) மைதானத்தில் குவிந்துள்ளனர்.
மிட்செல்லின் விக்கெட்டை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா:
Making an IMPACT straightaway! 🙌#JaspritBumrah wastes no time to find his 6th scalp and #MitchellStarc has to depart! 👏#AUSvINDOnStar 👉 3rd Test, Day 3 LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/mKFqrVBeKX
— Star Sports (@StarSportsIndia) December 16, 2024