ஜனவரி 24, புதுடெல்லி (New Delhi): ஆடவர்க்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் தொடரைப் போலவே, மகளிர் பிரீமியர் லீக் தொடர் (Women's Premier League) பெண்களுக்காக நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இதன் முதல் சீசன் நடந்தது. அதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது. தற்போது இந்த ஆண்டில் 2வது சீசன் தொடங்க போகிறது. அதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை வெளியீடு: அதனைத் தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் தொடர் (WPL) பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இந்தத் தொடரில் விளையாடும். இந்த 5 அணிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் 2 மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் சந்திக்கும். முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். Explosion At Firecracker Factory: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. இருவர் மரணம்..!
இந்தத் தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். மேலும், அனைத்து போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இறுதிப் போட்டி மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த சீசனில் அனைத்து போட்டிகளும் டெல்லி மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடைபெறுகின்றன.