Jay Shah (Photo Credit: @mufaddal_vohra X)

ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ (BCCI) இருக்கிறது. கிரிக்கெட்டின், அதிகார மையமாக இருக்கும் ஐசிசியிடம் (ICC) இருந்து, ஆண்டுக்கு 39 சதவீத லாபத்தை பிசிசிஐதான் பெறுகிறது. இந்நிலையில், ஐசிசியில் பெரிய மாற்றம் ஒன்று நடக்க உள்ளது. பிசிசிஐ செயலாளராகவும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா (Jay Shah), தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, இந்தாண்டு நவம்பரில் நடக்கவுள்ள ஐசிசி தலைவருக்கான தேர்தலில் நிற்க உள்ளதாக தகவல் வெளியாகின. Garlic Prices Hit New High: உச்சம் தொடும் பூண்டு விலை... இனி பூண்டு இல்லாமல் தான் சமையல்..!

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர்: குஜராத் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஜெய் ஷா. இவரது தந்தை அமித் ஷா மத்திய அமைச்சரானப் பிறகு, ஜெய் ஷா பிசிசிஐக்கு வந்துவிட்டார். பின்னர் பிசிசிஐ ஜெயலாளராக ஜெய் ஷா பொறுப்பேற்றார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக (Asian Cricket Council) கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு முறை அவர் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் இந்த கவுன்சிலின் முக்கிய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.