Jay Shah (Photo Credit: @mufaddal_vohra X)

ஆகஸ்ட் 21, புதுடெல்லி (New Delhi): குஜராத் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தவர் ஜெய் ஷா (Jay Shah). இவரது தந்தை அமித் ஷா மத்திய அமைச்சரானப் பிறகு, ஜெய் ஷா பிசிசிஐக்கு வந்துவிட்டார். பின்னர் பிசிசிஐ ஜெயலாளராக ஜெய் ஷா பொறுப்பேற்றார். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக (Asian Cricket Council) கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு முறை அவர் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் இந்த கவுன்சிலின் முக்கிய உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Sourav Ganguly Protest: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம்.. சவுரவ் கங்குலி எதிர்ப்பு போராட்டம்..!

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே தான் ஐசிசி தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இச்சூழலில் தான் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி தலைவருக்கான தேர்தலில் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஐசிசியின் தலைவராக பொறுபேற்கும்பட்சத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும் கூடுதல் பலனை பெறப்போகிறது.