2024 Paralympics TN State M edal Holders with TN CM MK Stalin (Photo Credit: @TNDIPRNews X)

செப்டம்பர் 25, சென்னை (Sports News): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) நடைபெற்ற பாராலிம்பிக் (Paralympics) போட்டிகள், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 09 அன்று நிறைவு பெற்றது. 168 நாடுகளை சேர்ந்த 4,400 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றுக்கொண்ட பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். தடகளம், துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன், வில்வித்தை, ஜூடோ என பல போட்டிகளில் அசத்திய வீரர்கள் மொத்தம் 29 பதக்கங்களை வென்றனர். Celebrating Popcorn: மறக்க முடியாத சிற்றுண்டியில் ஒன்றான பாப்கார்ன்; கூகுளின் இன்றைய சிறப்பு டூடுல்.! விபரம் உள்ளே.! 

பதக்கம் வென்ற தமிழக தங்கங்களுக்கு கெளரவம்:

இந்நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று வந்த மாற்றுத்திறன் வீரர்கள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா, மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தமாக ரூபாய் 5 கோடி மதிப்பிலான காசோலை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றோருக்கு பதக்கம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். தொடர்ந்து 3வது முறையாக பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் பதக்கம் வென்றுள்ளார். இம்முறை அவர் வெண்கலம் வென்று இருந்தாலும், அடுத்த முறை தங்கம் வெல்வேன் என முதல்வர், அமைச்சர்களிடம் உறுதியளித்தபடி மாரியப்பன் தனது பதக்கம் மற்றும் காசோலையை ஏற்றுக்கொண்டார்.