IND Vs BAN 1st Test Day 1 (Photo Credit: @imArshit X)

செப்டம்பர் 19, சென்னை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி (IND Vs BAN 1st Test Day 1) இன்று (செப்டம்பர் 19) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. IND Vs BAN Test: 88 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்.. இந்தியா நிதான ஆட்டம்..!

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வரிசை ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma), சுப்மன் கில் மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து, ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அப்போது, ரிஷப் பண்ட் 39 ரன்னில் அவுட்டானார். அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 56 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேஎல் ராகுலும் 16 ரன்னில் அவுட்டாக இந்திய அணி தடுமாறியது.

இந்நிலையில், 7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா - அஸ்வின் ஜோடி நிதானமாக விளையாடி பின்பு அதிரடி காட்டினர். இதில், மண்ணின் மைந்தன் அஸ்வின் (Ravichandran Ashwin) அதிரடியாக விளையாடி சதம் (102 ரன்) கண்டார். மறுபுறம் ஜடேஜா (Ravindra Jadeja) 86 ரன்களுடன் அரைசதம் கடந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 227 பந்துகளில் 195 ரன்கள் குவித்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 339 ரன்களை குவித்தது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ஹசன் மஹ்மூத் (Hasan Mahmud) 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஜடேஜா - அஸ்வின் ஜோடி அபார ஆட்டம்: