அக்டோபர் 21, தூத்துக்குடி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் வரும் நவம்பர் மாதம் பார்வையற்றோருக்கான 4 வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் (Blind Cricket T20 World Cup 2024) போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டம் வேந்திரன், துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் எஸ். மகாராஜாவும் இடம்பெற்றுள்ளார்.
பயிற்சிக்கு பின் அணி அறிவிப்பு:
இந்திய பார்வையற்றோர் கிரிக்கே சங்கம் சிஏபிஐ, தனது 26 பேர் கொண்ட அணிபட்டியலை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இவர்களுக்கு வரும் அக்.27 முதல் தீவிர பயிற்சியும் டெல்லியில் வழங்கப்படுகிறது. பி1 பிரிவில் முற்றிலும் பார்வையற்றவர்கள், பி2 பிரிவில் 2 மீட்டர் வரை பார்வை வரம்பு கொண்டவர்கள், பி3 பிரிவில் 6 மீட்டர் வரை பார்வை திறன் கொண்டவர்கள் பயிற்சி பெறவுள்ளனர். பயிற்சிக்குப்பின்னர், இந்திய கிரிக்கெட் அணிக்கான 17 பேர் கொண்ட குழு அறிவிக்கப்படும். France Educational Tour: பிரான்ஸ் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லும் 55 ஆசிரியர்கள்; அமைச்சர், முதல்வர் பாராட்டு., வாழ்த்து.!
சிறப்பான பங்களிப்பு:
இடதுகை வேகப்பந்து வீச்சாளர், பேட்ஸ்மேன் என அசத்தும் மகாராஜா, பி1 பிரிவில் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மஹாராஜா, கடந்த 2023ல் பர்மிங்ஹாமில் நடைபெற்ற உலக விளையாட்டுப்போட்டியில், முதல் முறையாக இந்திய அணிக்காக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். பின் துபாயில் நடந்த பாகிஸ்தான், இலங்கை ஆண்களுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பயிற்சி பெற அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி முகாமிலும் கலந்துகொண்டார்.
அணியில் இடம்பெற்றதால் மகிழ்ச்சி:
இந்நிலையில், அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து மஹாராஜா பேசுகையில், "அமெரிக்காவில் தான் பெற்ற பயிற்சி சிறப்பாக, பயனுள்ளதாக இருந்தது. தேசிய அளவில் அணையில் நான் இடம்பெற்றதில் மகிழ்ச்சி. கடந்த 3 போட்டியில் பந்துவீச்சில் எனது செயல்திறனை வெளிப்படுத்தினேன். கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் மீது மத்திய அரசு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என தெரிவித்தார்.
இந்த ஆண்டில் நடைபெறும் 4 வது பார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 2012, 2017ம் ஆண்டுகளில் பாக். அணியையும், 2022ல் வங்கதேச அணியையும் தோற்கடித்து இந்தியா முதல் 3 டி20 கோப்பைகளை கைப்பற்றி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ல் இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற காணொளி:
#TeamIndia beat Bangladesh by 120 runs & clinched the 3rd #T20WorldCup 2022 🏆 pic.twitter.com/Vod0x13fzx
— Doordarshan Sports (@ddsportschannel) December 17, 2022