ஏப்ரல் 01, விசாகப்பட்டினம் (Sports News): ஐபிஎல் 2024 தொடரில், நேற்று 13வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி - சென்னை (DC Vs CSK) அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின், ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
தோனியின் ஆட்டத்தை கொண்டாடிய ரசிகர்கள்: ஆட்டத்தில் நேற்று நடப்பு சீசனில் முதல் முறையாக தோனி களமிறங்கி இருந்தார். தோனி களமிறங்கிய வேகத்தில் சிக்ஸர், பவுண்டரி என இறுதிக்கட்டத்தில் அடித்து ஆடியதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்திற்கு உள்ளாகினர். இதனால் விசாகப்பட்டினம் மைதானமே தோனியின் பெயரால் அதிர்ந்துபோனது. தொடர்ந்து சென்னை அணி நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவினாலும், தோனியின் பேட்டிங் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதால் முடிவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
பணியாளர்களுடன் தோனி கிளிக்ஸ்: இந்நிலையில், போட்டி நிறைவுபெற்றதும் எம்.எஸ் தோனி, மைதானத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனால் மகிழ்ச்சியடைந்தவர்கள், மைதானத்தின் வெவ்வேறு திசைகளில் இருந்தும் விரைந்து ஓடோடி வந்து தோனியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த காட்சிகள் அங்கிருந்த பார்வையாளர் ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டதால் வைரலாகி வருகிறது.
Look how the Ground Staff are rushing from the ground corners to take a pic with MS Dhoni @msdhoni 💛 pic.twitter.com/F4goUiKsG3
— 🎰 (@StanMSD) April 1, 2024