மே 29, குஜராத் (Cricket News): குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி கிரிக்கெட் (Narendra Modi Stadium) மைதானத்தில், நேற்று (28-05-2023) அன்று ஐபிஎல் 2023 தொடரின் இறுதி ஆட்டம் நடைபெறவிருந்தது.
இரவு 07:30 மணிக்கு ஐ.பி.எல் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேலையில், மழையின் காரணமாக தொடர் தாமதம் ஏற்பட்டது. கனமழை பெய்த காரணத்தால், நேற்றைய போட்டி நடைபெறாமல் போனது.
தாமதமாக போட்டி தொடங்குமா? 5 ஓவர் போட்டி நடைபெறுமா? நள்ளிரவில் சூப்பர் ஓவர் நடைபெறுமா? என்ற பல கேள்விகள் ரசிகர்களுக்கு வந்து சென்ற நிலையில், கனமழை காரணமாக மைதானத்தில் நீர் இருந்ததால் அனைத்தும் பொய்த்துப்போனது. Women With Died Son: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. 75 ஆண்டுகளாக சாலை இல்லாததால் பலியான உயிர்.!
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் (Chennai Super Kings Vs Gujarat Titans) அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று (29-05-2023) இரவு 07:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மழை குறுக்கிட்டால் இறுதி முடிவை நடுவர் எடுப்பார்கள்.
ஐ.பி.எல் 2023 தொடரின் புள்ளி பட்டியலை பொறுத்தமட்டில் சென்னை அணி 14 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் இருக்கிறது.
Whoever said Gujarat is a dry state 🙄#GTvsCSK #CSKvsGT @ChennaiIPL @IPL #IPLFinals2023 pic.twitter.com/A8Bqjh8qfk
— Vibhor (@dhotedhulwate) May 29, 2023