ஆகஸ்ட் 06, பாரிஸ் (Sports News): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024.. டென்னிஸில் தங்கம் வென்றார் ஜோகோவிச்..!
ஈட்டி எறிதல் போட்டி: இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருந்த ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைப்பெறும் இப்போட்டியில் மொத்தம் 32 பேர் பங்கேற்றனர். முதல் கட்டமாக நடைபெறும் தகுதி சுற்றில் ஏ, பி என இரண்டு குழுக்காளாக வீரர்கள் பங்கேற்றனர். இந்தச் சுற்றில் தகுதி பெற ஒரு வீரர் 84 மீட்டர் தூரம் ஈட்டி எறிய வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் 6 வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் பி பிரிவில் உள்ள இந்திய வீரர் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) தான் முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் ஈட்டியை எறிந்து, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Neeraj Chopra Qualify for the Finals
पहली ही बार मे 89.34 मीटर शानदार 🔥🔥
उड़ा दिया भाला 🎉🎉#Paris2024 #Cheer4Bharat #Olympics #Athletics #NeerajChopra#NeerajChopra #IndiaAtParis24 pic.twitter.com/k6GLNpiFUS
— Abhinay Maths (@abhinaymaths) August 6, 2024