Novak Djokovic (Photo Credit: @DjokovicFan_ X)

ஆகஸ்ட் 05, பாரிஸ் (Sports News): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். TNPL 2024: தமிழ்நாடு பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது திண்டுக்கல்; கோவை அணி தோல்வி..!

இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) பலபரீட்சை நடத்தினர். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் () 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். இது தான் ஒலிம்பிக்கில் ஜோகோவிச் வெல்லும் முதல் தங்கம்.தோல்வியடைந்த அல்காரஸ் (Carlos Alcaraz) வெள்ளி பதக்கம் வென்றார்.