DD Vs LKK 1st Batting (Photo Credit: @StarSportsTamil X)

ஜூன் 05, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் இன்று (ஜூன் 05) தொடங்கியது. இன்று முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று தொடங்கிய தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் (Dindigul Dragons Vs Lyca Kovai Kings) அணிகள் மோதுகின்றன. DD Vs LKK Toss Update: திண்டுக்கல் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றியுடன் தொடங்க போவது யார்..?

திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் (Dindigul Dragons Vs Lyca Kovai Kings):

ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணிக்கு கே விஷால் வைத்யா 6, சுரேஷ் லோகேஷ்வர் 15 ரன்னில் சுமாரான தொடக்கம் கொடுத்து அவுட்டாகினர். அடுத்து, ஜோடி சேர்ந்த சச்சின் - சித்தார்த் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அப்போது, ஆன்ட்ரே சித்தார்த் 25 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

150 ரன்கள் இலக்கு:

இதனையடுத்து, சச்சின் அரைசதம் (51 ரன்கள்) கடந்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் ஷாருக்கான் 14 பந்தில் 25 ரன்கள் அடித்து நடையை கட்டினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது. திண்டுக்கல் அணி தரப்பில் அஸ்வின், சந்தீப் வாரியர், பெரியசாமி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

சச்சின் அரைசதம் அடித்து அசத்தல்: