
ஜூன் 05, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் இன்று (ஜூன் 05) தொடங்குகிறது. இன்று முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் (Dindigul Dragons Vs Lyca Kovai Kings) அணிகள் மோதுகின்றன. DD Vs LKK: டிஎன்பிஎல் 2025; தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று மோதல்..!
திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் (Dindigul Dragons Vs Lyca Kovai Kings):
ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 முறையும், லைகா கோவை கிங்ஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.