
ஜூன் 05, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக 8 சீசன்கள் முடிவடைந்து, 9வது சீசன் இன்று (ஜூன் 05) தொடங்குகிறது. இன்று (ஜூன் 05) முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மொத்தம் 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நடப்பு தொடரின், முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று இரவு 7.15 நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் (Dindigul Dragons Vs Lyca Kovai Kings) அணிகள் மோதுகின்றன. TNPL 2025: டிஎன்பிஎல் 2025 இன்று தொடக்கம்.. அணி விவரம், பரிசுத்தொகை மற்றும் நேரலையில் பார்ப்பது எப்படி?
திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் லைகா கோவை கிங்ஸ் (Dindigul Dragons Vs Lyca Kovai Kings):
ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில், கோவை அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணியை கோப்பையை கைப்பற்றியது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நேருக்கு நேர்:
இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 முறையும், லைகா கோவை கிங்ஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள்:
ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), மான் பாஃப்னா, பாபா இந்திரஜித், ஆர்கே ஜயந்த், ஷிவம் சிங், விமல் குமார், தினேஷ் எச், ஹன்னி சைனி, எம் கார்த்திக் சரண், அத்துல் விட்கர், கணேசன் பெரியசாமி, டிடி சந்திரசேகர், எம் விஜு அருள், சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி, ராஜ்விந்தர் சிங்.
லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்:
ஷாருக்கான் (கேப்டன்), ஆன்ட்ரே சித்தார்த், சாய் சுதர்சன், பாலசுப்ரமணியம் சச்சின், ஜிதேந்திர குமார், கே விஷால் வைத்யா, பி விட்யூத், பிரதீப் விஷால், ராமலிங்கம் ரோஹித், மாதவ பிரசாத், பி ஆதித்யா, சுரேஷ் லோகேஷ்வர், அம்ப்ரிஷ் ஆர்எஸ், எம் சித்தார்த், கோவிந்த் ஜி, குரு ராகவேந்திரன், ஜாதவேத் சுப்ரமண்யன், என் கபிலன், ரமேஷ் திவாகர், பி புவனேஸ்வரன்.