IND Vs ENG T20i & ODI Series 2025 (Photo Credit: @BCCI X)

பிப்ரவரி 11, அகமதாபாத் (Sports News): இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணி, இந்திய தேசிய கிரிக்கெட் அணியுடன் டி20 (IND Vs ENG T20i Series 2025) மற்றும் ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி, 5 டி20 போட்டிகளில், இந்தியா 4 போட்டியில் வெற்றி அடைத்து டி20 தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து ஒரு டி20 போட்டியில் வெற்றி அடைந்தது. டி20-ஐ தொடர்ந்து, இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 3ல்2 நடைபெற்று முடிந்து, இந்தியா 2 போட்டியிலும் வெற்றி அடைந்து ஒருநாள் போட்டியையும் கைப்பற்றியது. எஞ்சிய இறுதி ஆட்டம் இந்தியாவுக்கு வெற்றியா? தோல்வியா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை எனினும், ஒருநாள் தொடரின் மூன்று போட்டியிலும் இந்தியா வெற்றி அடைந்தால், அது சொந்த நாட்டில் மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் (India Vs England 3rd ODI 2025):

இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி நாளை (12 பிப்ரவரி 2025) மதியம் 01:30 மணியளவில் தொடங்குகிறது. ஒருமணிக்கு டாஸ் போடப்பட்டு பின் ஆட்டம் தொடங்கும். அகமதாபாத் வானிலை (Ahmedabad Weather)-ஐ பொறுத்தவரையில், பகல் நேர வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும், இரவு நேர வெப்பநிலை 18 டிகிரி செல்சியசும் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 10 கிமீ வேகம் என்ற அளவில் இருக்கும். வறண்ட வானிலையே நிலவும் என்பதால், மழைக்கு வாய்ப்புகள் இல்லை. நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் 132,000 பார்வையாளர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை காணலாம் என்பதாலும், இறுதி போட்டியை காணும் அவளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். முன்கூட்டியே டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) ஓடிடியிலும் நேரலையிலும் பார்க்கலாம்.

அகமதாபாத்-க்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் அணி (Team India Arrived Ahmedabad):