India Vs England ODI Series 2025 (Photo Credit: @shivam_6964 X / @airnewsalerts X)

பிப்ரவரி 03, நாக்பூர் (Sports News): இந்தியாவுக்கு சுறுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 22 முதல் தொடங்கி நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 ஆட்டத்தில், இந்தியா 4 போட்டிகளில் வெற்றி அடைந்து தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி மூன்றாவது டி20 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய வெற்றியை அடைந்து, பாராட்டுகளை குவித்தது. டி20 ஆட்டத்தின் (IND Vs ENG T20i 1st Match 2025) முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், இரண்டாவது ஆட்டத்தில் (IND Vs ENG T20i 2nd Match 2025) 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், மூன்றாவது ஆட்டத்தில் (IND Vs ENG T20i 3rd Match 2025) 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், நான்காவது ஆட்டத்தில் (IND Vs ENG T20i 4th Match 2025) 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், ஐந்தாவது ஆட்டத்தில் (IND Vs ENG T20i 5th Match 2025) 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி அடைந்தது. IND Vs ENG 5th T20i 2025: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி; இந்திய அணி திரில் வெற்றி.! 

டி20 ஐ தொடர்ந்து ஒருநாள் போட்டிகள்:

அதனைத்தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா - இங்கிலாந்து (IND Vs ENG ODI) அணிகள் 3 ஒருநாள் போட்டிகளில் மோதிக்கொள்கின்றன. இந்த போட்டியின் முதல் ஆட்டம் (India Vs England 1st ODI) வரும் பிப்ரவரி 06, 2025 அன்று, நாக்பூரில் உள்ள கிரிக்கெட் விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒருநாள் (India Vs England 2nd ODI) ஆட்டம் பிப்ரவரி 09, 2025 அன்று ஒடிசாவில் உள்ள கட்டக், பார்பாரி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. மூன்றாவது (India Vs England 3rd ODI) மற்றும் இறுதி ஒருநாள் போட்டி பிப்ரவரி 12, 2025 அன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தினை டிஸ்னி ஹாட்ஸ்டார் (Disney Hotstar) ஓடிடி தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும் நேரில் காணலாம். Abhishek Sharma: 18 பந்துகளில் 50 ரன்கள்.. 37ல் 100.. அபிஷேக் ஷர்மா அசத்தல் ஆட்டத்தால் அதிர்ந்துபோன வான்கடே அரங்கம்.! 

ஒருநாள் போட்டிகள்:

இந்தியா - இங்கிலாந்து (India Vs England 1st ODI 2025 Match) அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. அன்றைய நாளின் 01:30 மணியளவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெறுகிறது. அன்று பகல் நேர வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியஸ், இரவு நேர வெப்பநிலை 15 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் இருக்கும். இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றி அசத்திய இந்தியா, ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

அணி வீரர்கள் விபரம்:

ரோஹித் சர்மா வழிநடத்தும் இந்திய (Team India ODI Squad 2025 Against England) அணியில் திலக் வர்மா, ரிங்கு சிங், சூர்யா குமார் யாதவ், கேஎல் ராகுல், யஜஸ்வி ஜெய்ஷ்வால், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அபிஷேக் ஷர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, முகமது சமி, ரவி பீஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் (Team England ODI Squad 2025 Against India) ஜேமி ஸ்மித், ஹேரி புரூக், ஜேக்கப் பெத்தல், லைம் லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்டன், பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், பென் டக்கட், ஜோப்ரா ஆர்ச்சர், சபீக் முகமது, பிரைடன் கார்ஸ், மார்க் வுட், ஆதில் ரஷீத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில், முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் 20 நிமிடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்: