ENG Vs IND 4th Test Day 3 Lunch (Photo Credit: @cricbuzz X)

ஜூலை 25, மான்செஸ்டர் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில், 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ENG Vs IND 4th Test, Day 2: களத்திற்கு திரும்பிய ரிஷப் பந்த்.. வலுவான நிலையில் இந்தியா..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 23) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டரில் தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அபாரம்:

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து 2 விக்கெட்களை இழந்து 225 ரன்கள் அடித்தது. இந்நிலையில், இன்று 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஓல்லி போப் - ஜோ ரூட் இணை நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3ஆம் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 74 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 332 ரன்கள் அடித்துள்ளது. ஓல்லி போப் 70* ரன்கள், ஜோ ரூட் 63* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 26 ரன்கள் மட்டுமே பின்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):

ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்.