ஜூலை 23, மான்செஸ்டர் (Sports News): இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில், 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. ENG Vs IND 4th Test: இங்கிலாந்து - இந்தியா 4வது டெஸ்ட்.. நாளை மான்செஸ்டரில் பலப்பரீட்சை..!
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இந்நிலையில், இன்று (ஜூலை 23) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இப்போட்டியில், இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய ஷோயிப் பஷீருக்கு பதிலாக லியாம் டாசன் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இவருக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ் அணியில் இணைந்துள்ளார். மேலும், கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஆகாஷ் தீப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து (பிளேயிங் லெவன்):
ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
இந்தியா (பிளேயிங் லெவன்):
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்.