அக்டோபர் 26, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (PAK Vs ENG 3rd Test, Day 2) அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (அக்டோபர் 24) ராவல்பிண்டியில் (Rawalpindi) 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. PAK Vs ENG 3rd Test: நிலைத்து நின்று விளையாடி சவுத் ஷகீல் சதம்.. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்..!
இதன்பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 96.4 ஓவர்களில் 344 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சவுத் ஷகீல் 134 ரன்கள் அடித்தார். இதனையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.2 ஓவர்களில் 112 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் (Joe Root) 33 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி சார்பில் நோமன் அலி (Noman Ali) 6, சஜித் கான் (Sajid Khan) 4 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனால், பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற வெறும் 36 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3.1 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 37 அடித்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் சான் மசூத் 6 பந்துகளில் 23 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சான் மசூத் அபாரம்:
🚨4 FOURS IN A ROW FOR SHAN MASOOD. WHAT A STATEMENT MADE BY HIM 🇵🇰#PAKvENG #PAKvsENG pic.twitter.com/0WnMB1jRq6
— Pro Cricket (@ProCricket10) October 26, 2024